கவுதமிக்கு எது நல்லதோ, எது ஆறுதல் தருமோ அதுவே எனக்கு போதும் என்று நடிகர் கமலஹாசன் உருக்கமாக கூறியுள்ளார்.

657

கவுதமிக்கு எது நல்லதோ, எது ஆறுதல் தருமோ அதுவே எனக்கு போதும் என்று நடிகர் கமலஹாசன் உருக்கமாக கூறியுள்ளார்.
தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழ் திரைப்படங்கள் மூலம் கமலஹாசன் முன்னணி நட்சத்திரமாக விளங்கினார். 1995ம் ஆண்டுகளில் முன்னிலை பெற்றிருந்த நடிகை கவுதமியை நட்பு ரீதியாக தம்முடன் சேர்த்துக் கொண்டார். இக்கட்டான சூழ்நிலையிலும் கூட கவுதமிக்கு, பல உதவிகளை கமல் செய்துள்ளார். இந்தநிலையில், கமலுடனான 15 ஆண்டு கால நட்பு முடிவுக்கு வந்திருப்பதாக கவுதமி அறிவித்துள்ளார். கமலின் மகள் ஸ்ருதிக்கும், கவுதமிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகவும், தம்முடைய மகள் சுப்புலட்சுமியை சினிமாவில் நடிக்க வைக்க கவுதமி முயற்சி செய்வதாலும், கமலிடமிருந்து பிரிவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன், கவுதமிக்கு எது நல்லதோ, எது ஆறுதல் தருமோ அதுவே எனக்கு போதும் என்றும், தன்னுடைய உணர்வுகள் தேவையில்லாத ஒன்றாகவே கருதுவதாகவும் நடிகர் கமலஹாசன் கூறியுள்ளார். அத்துடன் ஸ்ருதி, அக்சரா, சுப்புலட்சுமி ஆகிய மூவருமே என்னுடைய மகள்கள்தான் என்று கூறிய அவர், அந்த வகையில் தாம் அதிர்ஷ்டக்கார தந்தையாகவே உணர்கிறேன் என்று கமலஹாசன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.