19ஆம் தேதி சென்னையில் காவிரி உரிமைக்கான கூட்டம் – கமல்ஹாசன் தெரிவித்தார்.

1023

காவிரி உரிமைக்கான கூட்டம் 19ம் தேதி நடைபெறும் என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் களம் காண்போம் என கூறினார். காவிரி பிரச்சனை என்பது மக்கள் பிரச்சனை என
குறிப்பிட்ட கமல்ஹாசன், கட்சியை தாண்டி அனைவரும் இதில் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
19ஆம் தேதி சென்னையில் காவிரி உரிமைக்கான கூட்டம் நல்லகண்ணு தலைமையில் நடத்தப்படும் என்றும் கமல்ஹாசன் குறிப்பிட்டார். தமிழகம் படிப்படியாக தனது உரிமைகளை இழந்து வருவதாகவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.