அரவக்குறிச்சி உட்பட 13 காவல்நிலையங்களில் கமல் மீது புகார், முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனுதாக்கல்

134

அரவக்குறிச்சி உள்பட 13 காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத உணர்வை புண்படுத்தும் வகையில் பேசுதல், மத ரீதியில் மோதலை தூண்டும் வகையில் பேசுதல் என இரண்டு பிரிவுகளில் கமல்ஹாசன் மீது காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 13-க்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களில் இது போல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கமல்ஹாசன் அளித்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு தடை வழங்க விடுமுறை கால அமர்வில் விசாரிக்க இயலாது எனவும், மனுதாரர் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தால் அதனை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, கமல்ஹாசன் தரப்பில் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.