சின்னத்திரையில் தோன்றுவதை பெருமையாக எண்ணுகிறேன் : நடிகர் கமல்ஹாசன்

676

அதிக அளவிலான மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதற்காக சின்னத்திரையில் தோன்றுவதாகவும், அதனை தான் பெருமையாக நினைப்பதாகவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
வெள்ளித்திரையில் மட்டுமே நடித்து வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது, சின்னத்திரையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாக உள்ளார். இந்த நிகழ்ச்சியின் அறிமுகக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன், சின்னத்திரையை பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள், கண்டிப்பாக இத்தகைய நிகழ்ச்சிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவார்கள் என்றும், சின்னத்திரையில் தோன்றுவதன் மூலம் அதிக அளவிலான மக்களை சென்றடைய முடியும் என்றும் கூறினார். சின்னத்திரையில் தோன்றுவதை தான் பெருமையாக நினைப்பதாகவும், விரைவில் தன்னைப் போன்ற பிரபலங்கள் பலரும் சின்னத்திரைக்கு வருவார்கள் என்றும் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.