எல்லாம் செய்தது போல சிலர் நடித்துக் கொண்டிருக்கின்றனர் – மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்

295

தமிழக மக்களுக்கு எல்லாம் செய்தது போல சில அரசியல்வாதிகள் நடித்துக்கொண்டிருப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பொதுமக்களை சந்தித்து வருகிறார். தாராபுரம் எல்லம்பாளையைம் கிராமத்தில் திரண்டிருந்த கிராம மக்களிடையே பேசிய அவர், ஊழலை முதலில் ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதனை மக்கள் நீதி மய்யம் செய்வது மட்டுமல்ல, மக்களும் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார். படித்த இளைஞர்கள் கிராமங்களை நோக்கி வர வேண்டும் என்று கூறிய கமல்ஹாசன், நகரத்தார் எல்லாம் கிராமம் நோக்கி நகரும் காலம் வரும் என்றும் தெரிவித்தார்.