ரஜினி, கமல் நல்லாட்சி தருவார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்

435

ரஜினி, கமல் நல்லாட்சி தருவார்கள் என்று மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை அடையாறில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில், ராமதாஸ் கலந்து கொண்டு விழித்தால் விடியும் என்ற நூலை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், சுதந்திரம் பெற்றும், பொதுக்கூட்டம் நடத்தவும், மக்களை சந்திக்கவும் அனுமதி பெற வேண்டியுள்ளது என்றார். ஓ.பன்னீர் செல்வம் டெல்லிக்கு சென்றது, தன் குறைகளை சொல்வதற்காகத் தான் என்று ராமதாஸ் குறிப்பிட்டார். ஊழல் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் ஸ்டாலின் மனு அளித்தது சரியான செயல் என்று அவர் பாராட்டினார்.