kamal

தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனைகள் குறித்து மத்திய அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனையை விரைந்து வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் வருமான வரித்துறை சோதனைகள் குறித்த சந்தேகங்கள் வலுத்து இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த சோதனைகள் குறித்து மத்திய அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.