காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் – கமல்ஹாசன்

201

காவிரி பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காவிரி பிரச்சனை தொடர்பாக பெங்களூருவில் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்து பேசினார். அப்போது காவிரி விவகாரம் குறித்து இருவரும் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய குமாரசாமி, காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய கமல்ஹாசன், காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண வேண்டியது அவசியம் என்றார்.