மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – கமல்ஹாசன்

261

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு விட்டதாகவும், மாநில அரசு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கமல் வலியுறுத்தியுள்ளார். துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார். துப்பாக்கி சூட்டிற்கு அனுமதி அளித்தது யார்? துப்பாக்கிச்சூட்டில் என்னென்ன கருவிகள் பயன்படுத்தப்பட்டன? எத்தனை பேர் உயிரிழந்தனர்? எத்தனை பேர் காயமடைந்தனர்? என அடுக்கடுக்கான கேள்விகளை கமல்ஹாசன் எழுப்பியுள்ளார்.