சுரேஷ் கல்மாடியின் ஆயுட்கால தலைவர் நியமனம் ரத்து , இந்திய ஒலிம்பிக் சங்கம் அதிரடி.

99

ஆயுட்கால தலைவராக சுரேஷ் கல்மாடி, அபேசிங் சவுதாலா ஆகியோரின் நியமனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சுரேஷ் கல்மாடி மற்றும் அபேசிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்க ஆயுட்கால தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் மிகப்பெரிய ஊழலில் ஈடுபட்டது தொடர்பாக சுரேஷ் கல்மாடி 10 மாத காலம் சிறையில் இருந்து பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். அதேபோல், 2012 ஆம் ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக அபே சிங் சவுதாலாவும் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 2014-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஊழல் கரை படித்த இருவரையும் ஒலிம்பிக் சங்கத்தின் ஆயுட்கால தலைவராக நியமித்துள்ளததற்கு கண்டனம் எழுந்ததது. இந்த நிலையில், ஆயுட்கால தலைவராக சுரேஷ் கல்மாடி, அபேசிங் சவுதாலா ஆகியோரின் நியமனத்தை இந்திய ஒலிம்பிக் சங்கம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.