கள்ள நோட்டு புழக்கத்தை கண்காணிக்க தனிப் பிரிவை ஏற்படுத்தும்படி நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியை கேட்டு கொண்டுள்ளது.

297

கள்ள நோட்டு புழக்கத்தை கண்காணிக்க தனிப் பிரிவை ஏற்படுத்தும்படி நிதி அமைச்சகம் ரிசர்வ் வங்கியை கேட்டு கொண்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் பெறப்படும் கள்ள நோட்டு குறித்து உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது என்றும், அண்டை நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் மாநிலங்களில் பெறப்படும் கள்ள நோட்டு பற்றியும் சிறப்பு கவனம் செலுத்தபடுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, ரிசர்வ் வங்கி தனிப்பிரிவை ஏற்படுத்தி, கள்ள நோட்டு புழக்கத்தை கண்காணிக்க வேண்டும் என்றும் நிதியமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இத்தகைய விஷயங்களை மாநில காவல்துறையின் பொருளாதார குற்றங்கள் பிரிவுக்கும், புலன் விசாரணை முகமைகள் மற்றும் அமலாக்க துறைக்கும், தெரிவிக்கும்படி, மத்திய ரிசர்வ் வங்கியை கேட்டு கொண்டுள்ளதாக நிதியமைச்சக அறிக்கை
கூறுகிறது.