உசிலம்பட்டியில் அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வாடகை படி போல் தங்களுக்கும் வழங்க வேண்டி கள்ளர் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

299

தமிழ் நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் மதுரை மாவட்டமுசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தினர். உசிலம்பட்டி நகர் மற்றும் ஊராட்சிகளில் பணியாற்றும் பிறதுறை ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் பெறும் வீட்டு வாடகைப்படிக்கு இணையாக கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டி இந்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்