பாசனத்திற்காக இன்று கல்லணை திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி.

372

கல்லணையிலிருந்து பாசனத்திற்காக இன்று நீர் திறக்கப்பட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி, கே.ஆர்.எஸ் உள்ளிட்ட அணைகளிலிருந்து தமிழகத்திற்கு உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதன்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாகவும், பாசனத்திற்கான நீர் திறப்பு 20 ஆயிரம் கன அடியாகவும் உள்ளது. இந்நிலையில் காவிரி நீர் வந்தடைந்ததை தொடர்ந்து இன்று பாசனத்திற்காக கல்லணை திறக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாட்டு பணிகளை பொது பணித்துறை அதிகாரிகள் செய்துள்ளனர். கல்லணையை திறக்கும் நிகழ்வில் அமைச்சர்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்களும் , சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளனர்.