kallanai

இன்று மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளதைத் தொடர்ந்து ஜூலை 22-ஆம் தேதி திருச்சியில் உள்ள கல்லணை திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், இன்று அங்கிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படவுள்ளது. இந்தத் தண்ணீர் திருச்சியில் உள்ள கல்லணைக்கு ஜூலை 22-ம் தேதி வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் கல்லணையை திறக்க இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்லணை திறப்பு விழாவில் அமைச்சர்கள், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, அரியலூர், கடலூர் மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை முன்னிட்டு, கல்லணையில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளுக்குத் தண்ணீர் திறந்து விடுவதற்கான கதவுகளைச் சுத்தம் செய்து, மதகு எண்ணெய் இடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.