இருசக்கரவாகனம் மரத்தில் மோதி இருவர் உயிரிழப்பு..!

123

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே மரத்தின்மீது இரு சக்கரவாகனம் மோதி நண்பர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாவட்டம் உளனத்தூர் கிராம காட்டுக்கொட்டகை பகுதியை சேர்ந்த ராமர் என்பவர் தனது நண்பருடன் இருசக்கரவாகனத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் இருந்த மரத்தின் மீது பலமாக மோதியது. இதில் நண்பர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.