கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அடித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

301

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அடித்துக்கொன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

வேலூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே உள்ள வெலக்கல்நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், கட்டிட தொழிலாளியான இவர். 30 வருடங்களுக்கு முன்பு சின்னபாப்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், ஆண் வாரிசுக்காக அதே பகுதியைச் சேர்ந்த முருகம்மாள் என்பவரை 15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் முருகம்மாளுக்கும், தமிழ்ச்செல்வன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த கோவிந்தராஜ் கண்டித்துள்ளார். இதனால் கோவிந்தராஜை மனைவி முருகம்மாள் 4 பேர் உதவியுடன், அடித்து கொன்றதாக கூறப்படுகிறது. பின்னர் கோவிந்தராஜ் உடலை அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போட்டு சென்றுள்ளனர். இதுபற்றிய புகாரின்பேரில் நாட்றாம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, முருகம்மாளை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.