மறைந்த அருணாசல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.

197

மறைந்த அருணாசல பிரதேச முன்னாள் முதலமைச்சர் கலிக்கோ புல் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.
அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் கலிகோ புல் நேற்று முன்தினம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச் சடங்கு இன்று அவரது சொந்த கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக கலிகோ புல்லின் உடல் சீன எல்லையில் அமைந்துள்ள அஞ்சவ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹயூலியான் கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் எடுத்து செல்லப்பட்டது. ஏராளமான தொண்டர்கள் கண்ணீர் மல்க வீட்டின் முன் திரண்டிருந்தனர். கலிகோ புல் மறைவையடுத்து அம்மாநிலத்தில் அரசு 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது. இறுதி சடங்கு நடைபெறும் இன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு அரசு மரியாதையுடன் இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.