காளீஸ்வரி நிறுவனத்தில் 3வது நாளாக ஐ.டி.சோதனை !

199

காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
முறையாக வருமான வரி செலுத்தாத புகாரின் அடிப்படையில் காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 2 நாட்களாக
சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, புதுச்சேரி, மதுரை, விருதுநகர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நடத்திய இந்த சோதனையில் வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நடைபெறுகிறது. கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் காளீஸ்வரி எண்ணெய் நிறுவன இயக்குநர்கள் மூன்று பேரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றதாக கூறப்படுகிறது.