திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல்..!

250

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலத்துடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்த குறைவு காரணமாக ஜூலை 28ஆம் தேதி இரவு 1.30 மணிக்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் தற்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்றும் கருணாநிதியின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ச்சியாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.