கருணாநிதியின் மனைவிக்கு உடல்நல குறைவு : அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

134

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 7ஆம் தேதி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது மனைவியான தயாளு அம்மாளுக்கு நேற்றிரவு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தயாளு அம்மாள் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு இன்று மாலைக்குள் தயாளு அம்மாள் வீடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.