செம்மொழி திருநாளாக உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் – கவிஞர் வைரமுத்து

379

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை, செம்மொழி திருநாளாக உலகத் தமிழர்கள் கொண்டாட வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், கவிஞர் வைரமுத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோன்று, மலேசிய எழுத்தாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் மற்றும் மலேசிய எழுத்தாளர்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டாலின் தலைவராக இருந்து வழி நடத்துவார் என்று மக்கள் நம்புவதாக தெரிவித்தார். பாரத ரத்னா விருதுக்கு முழுமையான தகுதியடையவர் கருணாநிதி என்றும், இதை இந்திய அரசுக்கும் உணரும் எனவும் வைரமுத்து கூறினார். மலேசிய தமிழர்களுக்கு தொப்புள் கொடியாக திகழ்ந்தவர் திமுக தலைவர் கருணாநிதி என்று மலேசியா எழுத்தாளர் சங்கத்தலைவர் ராஜேந்திரன் தெரிவித்தார்.