கருத்துரிமை காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம்..!

334

திருச்சியில் நடைபெற்ற கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். இதனைத்தொடர்ந்து, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நேற்று கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி, கருத்துரிமை காத்தவர் கலைஞர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்துக்கொண்டனர். மேலும், இந்த கருத்தரங்கில், தமிழக ஊடகத்துறை வல்லுனர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், தமிழ் புலவர்கள், தமிழ் ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துக்கொண்டு, மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.