டுவிட்டரில் ட்ரெண்ட் ஆன கலைஞர் கருணாநிதியின் பெயர்….

313

கருணாநிதி மறைவையொட்டி அவரது பெயர் சமூக வலைதளமான டுவிட்டரில் உலக அளவில் ட்ரெண்ட் ஆனது.

சென்னை, காவேரி மருத்துவமனையில் 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்ட போது, சமூக வலைதளங்களில் karunanidhi, kalaingar, karunanidhi Health உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வந்தன. இந்தநிலையில், சிகிச்சை பலனின்றி கருணாநிதி நேற்று காலமானதை அடுத்து, திமுக தொண்டர்கள் மற்றும் வலைதள பயன்பாட்டாளர்கள் டுவிட்டரில் அதிக அளவில் கருத்துகளை பதிவிட்டனர். இதனால், டுவிட்டரில் கருணாநிதியின் பெயர் உலக அளவில் 3-வது இடத்தில் ட்ரெண்ட் ஆனது. இதனிடையே, வெளிநாட்டு பத்திரிகைகளான நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் டைம்ஸ், பிபிசி, மற்றும் பிரிட்டனை சேர்ந்த கார்டியன், கல்ஃப் டைம்ஸ், ஆகியவை கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து செய்திகளை வெளியிட்டுள்ளன. 19 ஆண்டுகள் ஆட்சியை அலங்கரித்தவர் கருணாநிதி என்று பத்திரிகைகள் புகழாரம் சூட்டியுள்ளது.