இலங்கையில் புத்த திருவிழாவையொட்டி நடைபெற்ற யானைகள் ஊர்வலம் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

245

இலங்கையில் புத்த திருவிழாவையொட்டி நடைபெற்ற யானைகள் ஊர்வலம் மற்றும் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கொழும்பு பகுதியில் புத்த கடவுளின் அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெற்றது. வண்ணமயமான நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். மின்விளக்குகள் மற்றும் வண்ண, வண்ண உடைகளால் அலங்கரிக்கப்பட்ட 12 யானைகள் நகரின் முக்கிய தெருக்களின் வழியே ஊர்வலமாக அழைத்து வரப்பட்டன. இந்த யானை ஊர்வலத்தை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.