கஜா புயலை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

கஜா புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கள்ளக்குறிச்சி உதவி ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வருவாய்துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, கஜா புயலை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.