அதிகாரிகளை மிரட்டி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காடு வெட்டி குருவை விடுவித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

272

அதிகாரிகளை மிரட்டி பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காடு வெட்டி குருவை விடுவித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அரியலூர் மாவட்டம் உஞ்சினி கிராமத்தை சேர்ந்த சடையன் என்பவர் 1997ம் ஆண்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய காடு வெட்டி குரு அரசையும், அதிகாரிகளையும் மிரட்டும் வகையில் பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, ஜெயங்கொண்டம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி மதிவாணன், காடு வெட்டி குருவை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.