பொதுக்குழு கூட்டத்தில் 100 சதவீத உறுப்பினர்கள் பங்கேற்பார்கள் – கடம்பூர் ராஜூ, செய்தி தொடர்புத் துறை அமைச்சர்!

353

தமிழகத்தில் ஆட்சி கலைய வேண்டும் என்று அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் யாரும் நினைக்கவில்லை என்றும், பொதுக்குழு கூட்டத்தில் 100 சதவீத உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் அமைச்சர் கடம்பூர் ராஜு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் கடம்பூர் ராஜு நெல்லை வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்விற்கு எதிராக தமிழக அரசு கடைசி வரை போராடியது என்றார். இதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 12 -ம் தேதி நடைபெறும் அ.தி.மு.க பொதுக்குழுவில், 100 சதவீத செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.