கொறடா உத்தரவு மீறியதால் 18 எம்எல்ஏ-க்கள் நீக்கம் : கடம்பூர் ராஜு அறிவிப்பு.

297

கொறடா உத்தரவு மீறி செயல்பட்டதால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகளின் கூட்டம், திருச்செந்தூரில் நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய கடம்பூர் ராஜு, முதலமைச்சரும், துணை முதல்வரும் இணைந்து தமிழகத்தை நல்ல முறையில் ஆட்சி செய்து வருவதாக தெரிவித்தார். ஏழை எளிய மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கோடு அவர்கள் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார். கொறடா உத்தரவு மீறி செயல்பட்டதால் தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடம்பூர் ராஜு கூறினார்.