ஸ்டாலினின் முதல்வர் கனவு பகல் கனவாகவே முடியும்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

268

முதலமைச்சராக வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு பகல் கனவாகவே முடிந்து விடும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருமான வரித்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தமிழகத்தில் சோதனை நடைபெற்று வருவதாக விளக்கம் அளித்தார். மழை வெள்ளம் ஏற்பட்டாலும் பகல்-இரவு பாராமல், அதிமுக ஆட்சியை கலைப்பதையே ஸ்டாலின் நோக்கமாக கொண்டுள்ளதாக கூறிய அமைச்சர், முதலமைச்சராக வேண்டும் என்ற அவரின் கனவு வெறும் பகல் கனவாகவே முடிந்துவிடும் என விமர்சித்தார்.