கடலூர் அருகே வெள்ளப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கடந்த 2015-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சுற்றுவட்டாரப்பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில், நிகழ்வாண்டு பருவ மழையை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, பேரிடர் காலத்தில் மீட்புப் பணிகளை முன்கூட்டியே திட்டமிட வசதியாக, அரக்கோணத்திலிருந்து துணை கமாண்டர் அப்துல்கனி தலைமையில் 15 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவினர் கடலூர் மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அப்போது, பூதம்பாடி, கல்குணம், மருவாய், ஓனாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வெள்ளக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்..