முழு கொள்ளளவை எட்டியுள்ள வீராணம் ஏரி..!

305

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டும் தண்ணீர், கல்லணைக்கு அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கு, கல்லணையில் இருந்து ஆயிரத்து 100 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், தற்போது 46 புள்ளி 80 அடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழைக் காரணமாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து 98 அடியை எட்டியுள்ளது. பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில் 2 ஆயிரத்து 300 கனஅடி நீரும், பவானி ஆற்றில் வினாடிக்கு ஆயிரத்து 500 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.