குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

322

குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் சின்ன முட்டம், கோவளம், மணக்குடி, குளச்சல் உள்ளிட்ட இடங்களில் சுமார் 13 அடிக்கு மேலாக கடலில் சீற்றம் உயர்ந்து வருவதால், கோவளம் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. அத்துடன் தங்களது கட்டுமரம் மற்றும் வலைகளை பழுது பார்க்கும் பணிகளில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கடல் நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்கவேண்டும் என்று மீனவ மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.