தூத்துக்குடி தாழமுதுநகர் பகுதியில் கடல் அட்டைகளை வைத்திருந்ததாக ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

143

தூத்துக்குடி தாளமுத்து நகர் கடற்கரை பகுதிக்குட்பட்ட மொட்டை கோபுரம் கடற்கரை பகுதியில் தாளமுத்து நகர் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மேட்டுப்பட்டியை சேர்ந்த மைதீன் என்பவரை நிறுத்தி சோதனையிட்டனர்.சோதனையில் அவரிடம் இருந்த 2 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளை தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக வன அலுவலரிடம் ஒப்படைத்தனர்.