முழு கொள்ளளவை எட்டிய கபினி – 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

990

கபினி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொட்டித் தீர்க்கும் மழையால், அணைகளுக்கு நீர் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கபினி அணை முழு கொள்ளளவை எட்டி இருப்பதால், காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகளில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டு இருப்பதால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

ஒகேனக்கல் அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பரிசல்களை இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 35 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. எனவே, அணையின் நீர்மட்டம், 70 அடியை எட்டியுள்ளது. உபரி நீர் தொடர்ந்து வருவதால், டெல்டா பாசனத்துக்காக அணையில் இருந்து விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.