கபினி அணைகளில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு..!

539

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டள்ளது.

கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,500 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 3 ஆயிரத்து 470 கனஅடி நீர் காவிரியில் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. காவிரியில் திறந்து விடப்பட்டுள்ள இந்த நீர் நாளை மாலை தமிழகம் வந்து சேரும். கர்நாடகாவில் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்து இருப்பதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.