கர்நாடக மாநிலம் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு..!

390

கர்நாடக மாநிலம் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு, விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு 37 ஆயிரம் கனஅடியாகவும், அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 35 ஆயிரம் கனஅடியாக உள்ளது.
இதனால் நேற்று வரை கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை முதல் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கபினி அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் 2 நாட்களில் கர்நாடக – தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடையும் என கூறப்படுகிறது.
இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக உயர வாய்ப்பு உள்ளது.