டெண்டுல்கர் மற்றும் ரிச்சர்ட்சை – விராட்கோலியிடம் காண்கிறேன் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ்

213

டெண்டுல்கர் மற்றும் ரிச்சர்ட்சை, விராத் கோலியிடம் காண்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் புகழாரம் தெரிவித்து உள்ளார்.
வங்கதேச அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கேப்டன் வீராட்கோலி இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் 4 டெஸ்ட் தொடர்களிலும் தொடர்ச்சியாக 4 இரட்டை சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த நிலையில் வீராட் கோலியை இந்திய அணி முன்னாள் கேப்டன் கபில் தேவ் வெகுவாக பாராட்டி உள்ளார். இது தொடர்பாக பேசிய கபில்தேவ் இதுவரை தான் பார்க்காத வகையில் வீராட் கோலி மிக சிறப்பாக விளையாடுவதாகவும், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்வதாகவும் தெரிவித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கு இந்திய வீரர் ரிச்சர்ட்ஸ் இருவரையும் விராட் கோலியிடம் காண்பதாகவும்,ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோலி இதே அதிரடியை தொடர வேண்டும் என்று விரும்புவதாகவும் கபில்தேவ் கூறியுள்ளார்.