மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது..!

274

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயம் சைவ கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.விநாயகர், கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், முருகன், ஆஞ்சநேயர் என அடுத்தடுத்து 5 தேர்கள் வரிசையாக மாட வீதிகளில் வலம் வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி சுமார் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.