தடையை மீறி கபாலி திரைப்படம் வலைதளங்களில் வெளியானது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

259

தடையை மீறி கபாலி திரைப்படம் வலைதளங்களில் வெளியானது குறித்து, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
கபாலி திரைப்படம் சட்ட விரோதமாக வலைதளங்களில் வெளியாவதை தடுக்கும் விதமாக, அந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனைத் தொடர்ந்து 169 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, கபாலி படம் பதிவேற்றம் செய்யவும் பதிவிறக்கம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், நேற்று திரையரங்குகளில் கபாலி படம் வெளியானது. தடையை மீறி வலைதளங்களிலும் திரைபடம் வெளியாகியுள்ளது.
அதிகாலை 6.20 மணிக்கு கபாலி படம் வலைதளங்களில் பதவிறக்கம் செய்யப்பட்ட ஆதாரங்களை தயாரிப்பாளர் தாணு, நீதிபதி கிருபாகரனிடம் சமர்பித்தார். இதனையடுத்து, உயர்நீதிமன்றம் தடை விதித்து இருக்கும்போது, மத்திய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கவில்லையா, என நீதிபதி கேள்வி எழுப்பினார். எந்தெந்த வலைதளங்களில் கபாலி படம் வெளியானது என்பது குறித்த பட்டியலை வழக்கறிஞர் குருமூர்த்தி, சமர்பிக்க தயாராக உள்ளதாக கூறினார். இதைத்தொடர்ந்து வழக்கு வரும் 26ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.