‘கபாலி’ வசூல் ரூ.40 கோடி! வெளிநாடுகளிலும் அமோக வசூல்!!

182

சென்னை, ஜூலை.23–
நடிகர் ரஜினிகாந்தின் ‘கபாலி’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் 12 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. அவரது ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார்கள்.
இப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ.40 கோடி என தெரிகிறது. இதனால் ஒரு வார காலத்தில் சுமார் ரூ.120 கோடியை இப்படம் வசூல் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இத்திரைப்படம் ஏற்கனவே ரூ.200 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாடு மற்றும் செயற்கைகோள் ஒளிபரப்பு உரிமையும் அடங்கும்.
அமெரிக்காவில் ‘பாகுபலி’ திரைப்படம் ஏற்படுத்தியிருந்த வசூல் சாதனையை ‘கபாலி’ திரைப்படம் முறியடித்துவிட்டது. முதல் நாளில் அங்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 கோடியை இத்திரைப்படம் வசூலித்துள்ளது.