காரைக்காலில் அரசு வேலை, மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்

276

காரைக்காலில் அரசு வேலை, மானியத்துடன் கடன் வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்
புதுச்சேரியை அடுத்த காரைக்காலில் ஜீவானந்தம் என்பவர் வசித்து வருகிறார். அறக்கட்டளை ஒன்று நடத்தி வரும் இவர் ரியல் எஸ்டேட் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில், பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பயன்படுத்தி, காரைக்கால் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலும் வேலை வாய்ப்பு, அரசு கடன், மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இடம் வாங்கி தருவதாக கூறி ஜீவானந்தம் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இத குமரி மாவட்டத்தை சேர்ந்த சண்முகம் எனபவர் அளித்த புகாரின் பேரில் ஜீவானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி குறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து, தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.