கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணிர் திறந்துவிடப்பட்டுள்ளது..!

258

கார் சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணிர் திறந்துவிடப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட கார் சாகுபடிக்காக நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பெருங்கால் மதகு வழியாக தண்ணீரை திறந்து வைத்தார். இன்று முதல் 105 நாட்களுக்கு 45 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக 2 ஆயிரத்து 756 ஏக்கர் நிலம் மற்றும் குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் தற்போது 72. 90 அடி தண்ணீர் உள்ளது.