கிடங்களில் நிறுத்தப்பட்டு இருந்த மதுபான லாரிகளுக்கு தீவைப்பு

306

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மதுபான கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகள் மதுபானங்களுடன் தீ வைத்து எரிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .

ஓரிக்கை பகுதியில் தமிழக அரசுக்கு சொந்தமான மதுபான கிடங்கு ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மது பானங்களுடன் மூன்று லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில், லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதுகுறித்து கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். மூன்று லாரிகளில் இருந்த மதுபான பாட்டில்கள் உட்பட 80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.