நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு காலா படத்தின் 2-வது போஸ்டர் வெளியிடப்பட்டது.

767

நடிகர் ரஜினிகாந்த்தின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது ரசிகர்களுக்காக காலா படத்தின் 2-வது போஸ்டர் வெளியிடப்பட்டது.
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் காலா படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இதன் இரண்டாவது போஸ்டரை நள்ளிரவு வெளியிட இருப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து காலா படத்தின் இரண்டாவது போஸ்டரை சரியாக 12 மணிக்கு டுவிட்டரில் அவர் வெளியிட்டார். ரஜினியின் பிறந்தநாளையொட்டி காலா படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.