காலா படத்திற்கு தடை கோரிய வழக்கு : நடிகர் ரஜினிகாந்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் ..!

490

காலா படத்திற்கு தடை கோரிய வழக்கு குறித்து, பிப்ரவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்க, நடிகர் ரஜினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காலா திரைப்படத்தின் கதை தன்னுடையது என்றும், படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னையை சேர்ந்த ராஜசேகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
காலா திரைப்படம் கரிகாலன் என்ற அடைமொழியுடன் தயாராகி வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். காலா என்ற தலைப்பில் படத்தை வெளியிடவும், படத்தை விளம்பரப்படுத்தவும் தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் பிப்ரவரி 12-ம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காலா படத்தின் இயக்குனர் ரஞ்சித் மற்றும் தயாரிப்பாளர் தனுஷ் ஆகியோரும் வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..