இன்று வெளியானது காலா திரைப்படம்..!

246

பலத்த எதிர்ப்புகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் இன்று வெளியானது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் காலா. ரஜினியின் அரசியல் பிரவேசம் தொடர்பான அறிவிப்புக்கு பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் மற்ற படங்களை விட இந்த படம் மீதான எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் அதிகரித்துள்ளன. பல்வேறு காரணங்களுக்காக பல முறை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று ஒருவழியாக காலா படம் திரைக்கு வந்தது. சென்னையில் மட்டும் 66 திரையரங்குகளில் காலா திரைப்படம் வெளியானது. சென்னையின் முக்கிய திரையரங்குகளான கமலா சினிமாஸ், உதயம் காம்ப்ளக்ஸ் ஆகியவற்றில் காலா இன்று வெளியாகவில்லை.

திரைப்படத்திற்கு அதிகமான தொகையை தயாரிப்பாளர் தரப்பில் கேட்டதால் தாங்கள் அந்தப் படத்தைத் திரையிடவில்லை என கமலா திரையரங்கம் தெரிவித்துள்ளது. பல்வேறு திரையரங்குகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு அதிகம் வசூலிக்கப்படுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். காலா திரைப்படத்திற்கு தமிழகத்திலும் எதிர்ப்புகள் வந்ததால், சென்னையில் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.