காலாவில் திரவியம் நாடாரை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு..!

299

காலா திரைப்படத்தில், மும்பையில் வாழ்ந்த திரவியம் நாடார் என்பவரை இழிவுபடுத்தும் வகையில், கதை அமைந்துள்ளதாகக் கூறி, அவரது குடும்பத்தினர் 101 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகர் ரஜினிகாந்த்-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்ததை அடுத்து, கர்நாடக மாநிலத்தில் காலா படத்தை வெளியிட கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல, தூத்துக்குடி சம்பவத்துக்கு சமூக விரோதிகளே காரணம் என பேசியதால், சுவிஸ், நார்வே நாடுகளில் காலா படத்தை திரையிடமாட்டோம் என விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த திரவியம் நாடாரை பற்றி காலா படத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி அவரது குடும்பத்தினர் ரஜினிகாந்த்-க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில், இழப்பீடாக 101 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.