சமூக நீதிக்காக போராட அழைப்பு – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

334

அனைவரும் சமூக நீதிக்காக போராட வேண்டும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அழைப்பு விடுத்துள்ளார்.

பேராயர் சர்குணத்தின் 80வது பிறந்தநாள் சென்னை கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது. இதில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி, சத்துணவு கூடத்தில் அருந்ததியர் சமைத்தால் சாப்பிடமாட்டோம் என கூறுவது தமிழகத்தில் தீண்டாமை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காட்டுவதாக வேதனை தெரிவித்தார்.

குடியரசு தலைவரையே கோவிலுக்குள் அனுமதிக்காதது அரசியல் சாசன சட்டத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு என்பது ஏட்டு சுரைக்காய் போன்று இருப்பதாக சுட்டிக் காட்டிய அவர், அனைவரும் சமூக நீதிக்காக போராட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.