காவிரி மேலாண்மை ஆணைய உறுப்பினர்கள் நியமனம்..!

314

நீண்ட இழுபறிக்கு பிறகு காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான பிரதிநிதிகளை கர்நாடக அரசு நியமித்துள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்கள் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தங்கள் தரப்பு உறுப்பினர்களை நியமனம் செய்தனர். ஆனால் கர்நாடகா தரப்பில் உறுப்பினர்கள் நியமிக்கப்படாததால் காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட துவங்குவதில் இழுபறி தொடர்ந்தது. இதனிடையே கர்நாடகாவுக்கு குட்டு வைக்கும் விதமாக தாமாகவே கர்நாடகாவுக்கான உறுப்பினர்களை நியமித்து மத்திய அரசு அறிவித்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர், உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து கர்நாடகா சார்பில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அம்மாநில நீர்வளத்துறை செயலர் ராகேஷ்சிங், காவிரி பாசனத்துறை செயலாளர் பிரசன்னா ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.