3ம் வகுப்பு மாணவி உண்டியல் மூலம் நிதியுதவி திரட்டல்..!

168

வாணியம்பாடியில் 3ம் வகுப்பு மாணவி கேரளாவிற்கு உதவி செய்ய நிதியுதவி சேமித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, படித்து வரும் மாணவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு உதவி செய்ய, 2 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 250 கிலோ நிவாரணப் பொருட்களை சேமித்து அனுப்பினர். அப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வரும் கிறிஸ்டினா மெர்ஸி என்ற சிறுமி, கேரளாவிற்கு நேசக் கரம் நீட்ட உண்டியல் மூலம் நிதியுதவி சேமித்து வருகிறார். இவரது முயற்சிக்கு ஏராளமானோர் உதவி செய்து வருகின்றனர்.